திருநெல்வேலியில் கடந்த 27ஆம் தேதி ஐ.டி ஊழியர் கவின் கவின் செல்வ கணேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐ.டி ஊழியர் மீது நடைபெற்ற ஆணவ படுகொலை கண்டித்தும் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் மீது நடைபெறும் தொடர் தாக்குதல்களை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பனையில் இருந்து இறக்கப்படும் “கல்லை” உணவுப் பொருள் என்று பிரச்சாரம் செய்து வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சீமானுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவாரத்தை நடத்தி சமாதானப்படுத்தி கலைந்து செல்ல அறிவுறுத்திய நிலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இன்று மாலை தேனியில் நடைபெறும் பொது கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தர உள்ள நிலையில் அவருக்கு எதிராக புதிய தமிழகம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.