விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவல்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவர் மகன் மணிகண்டன் வயது 22 கொட்டமடக்கி பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி என்பவர் கார்த்திக் (வயது 18) கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் ஆலங்குளத்திற்கு சென்றபோது அப்போது எதிரில் இருந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில மோதியதில் மணிகண்டன் சம்பவ இடத்தில் பலியானார். கார்த்திக் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார்.

அவர் உடலை கொட்டமடக்கி கொண்டு வந்த போது கார்த்திக், மணிகண்டன் ,உறவினர்கள் செவல்பட்டிலிருந்து திருவேங்கடம் செல்லும் சாலையில் திடீரென முன் விரோதம் காரணமாக டிராக்டர் மோதி கொலை செய்ததாக சாலை மறியலில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் அனுமதி இன்றி போக்குவரத்து இடையூறு செய்ததாக பஸ்மறியலில் ஈடுபட்ட காளிராஜ், அஜித், மாரிசாமி, மதன் மணிகண்டன் ,மகேஸ்வரன், உட்பட 24 ஆண்கள் 18 பெண்கள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












; ?>)
; ?>)
; ?>)