• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மீன் கழிவு ஆலைகளை மூட வேண்டும் என சாலை மறியல்..,

தூத்துக்குடி அருகே பொட்டலூரணி விலக்கில் அரசு, தனியார் பேருந்துகள், இடைநில்லா, குளிர்சாதன பேருந்துகள் நின்று செல்ல வேண்டும். பொட்டலூரணி அருகே செயல்பட்டு வரும் மீன் கழிவு ஆலைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொட்டலூரணி விலக்கில் சங்கரநாராயணன் என்பவர் தலைமையில் கிராம மக்கள் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை காவல் ஆய்வாளர், தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர், சங்கரநாராயணன் தலைமையில் கிராமத்தைச் சேர்ந்த 23 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும் வட்டாட்சியரால் உறுதியளிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஏற்கெனவே திட்டமிட்டபடி இன்று காலை பொட்டலூரணி விலக்கில் திரண்ட கிராம மக்கள், தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ஜாகீர் அகமது, தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி சுதீர் தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 


இதில், செல்வ நாராயணன் என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 65 பெண்கள் உள்ளிட்ட 120 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று சட்ட விரோதமாக ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.” மேலும். சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை குண்டு கட்டாக். தூக்கி. வேனில் ஏற்றினாரகள்.  இதனால். மெயின் ரோடு. போர்க்களம் போலா காட்சி அளித்தாகவும்.  உளவுத்துறை போலீசார். தெரிவித்தனர்.