• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை – தேனூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல்

ByKalamegam Viswanathan

Mar 13, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால்.பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது இங்கு சுமார் 6000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தேனூர் கல்லாங்குத்து பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதிக்கு கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக குடிநீர் மற்றும்.சாலை வசதி செய்து தரவில்லை எனக்கூறி பொதுமக்கள் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இது சம்பந்தமாக கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றியும் எந்த ஒரு நடவடிக்கையும் ஊராட்சி நிர்வாகம் எடுக்காததால் தேனூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தொடங்கியுள்ள இன்று பொதுமக்கள் திடீரென்று பஸ் மறியலில் ஈடுபட்டதால் தேர்வுக்கு செல்ல வேண்டிய மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானதாகவும் ஆகையால் அங்கு வந்த மாணவிகள் கேட்டுக் கொண்டதன்.அடிப்படையில் தற்காலிகமாக பஸ் மறியலை கைவிட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்…