விருதுநகர் மாவட்டம், மாரனேரி கிராமம் சுப்பிரமணியபுரம் ஊரணி கன மழையால் நிறைந்தது. மழைநீர் அருந்ததியர் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டதால், சிவகாசி வருவாய் வட்டாட்சியரின் உத்தரவுப்படி, தண்ணீர் வெளியேறும் கால்வாயில் உள்ள அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த வருவாய் ஆய்வாளர் சேரலாதன், மண்வெட்டியை கொண்டு மணல் மேடுகளை சீரமைத்தார். அவரது, பணியை கிராமபொதுமக்கள் வெகுவாக பாராட்டி வாழ்த்தினர்.
