• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் மரியாதை..!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98-&வது பிறந்த நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ஸதைவ அடல் எனப்படும் அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கார், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று (திங்கட்கிழமை) மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காந்தி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடம், சாந்தி வேனில் உள்ள முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவிடம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு சக்தி ஸ்தலத்திலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வீர் பூமியிலும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.