• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு.., போராட்டத்தில் குடியிருப்பு வாசிகள்..!

ByKalamegam Viswanathan

Nov 20, 2023

மதுரை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து பைப்லைன் மூலம் மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதன் வேலைப்பாடு பரவை பேரூராட்சி பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வைகை ஆற்றின் ஓரமாக குழாய் பதிப்பதை மாற்றி பரவை பேரூராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட வேளாளர் தெருவில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் பைப் பதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இதற்காக ஜெசிபி மூலம் வேலைகள் துவங்க வந்த ஊழியர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பரவை பேரூராட்சியின் 12 ஆவது வார்டு தெருவின் நுழைவு பகுதியில் தடுப்புகளை அமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து இடத்திற்கு வந்த பரவை பேரூராட்சி மன்ற தலைவர் குடியிருப்பு வாசிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் .தொடர்ந்து பொதுமக்களின் கருத்துக்களை மதுரை மாநகராட்சி மற்றும் அரசிடம் தெரிவிப்பதாக கூறி சென்றுள்ளார் இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் கூறும்போது எங்களின் கோரிக்கைகளை ஏற்காமல் குடியிருப்பு பகுதிக்குள் பைப் லைன்களை கொண்டுவர முயற்சித்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஆகையால் மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஏற்கனவே திட்டமிட்ட பகுதியில் பைப் லைனை கொண்டு செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.