கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில்அமைந்துள்ளது கதவனை இந்த கதவணையில் சுமார் 234 கோடி மதிப்பிற்கு 1.5 tmc தண்ணீர் தண்ணீரை தேக்கும் விதமாக கட்டப்பட்டது
இந்த கதவனை மேட்டூருக்கு அடுத்தபடியாக இந்த மாயனூர் கதவனை பார்க்கப்படுகிறது கரூர் மற்றும் திருச்சி என இரு மாவட்டங்களை இணைக்கும் விதமாக இந்த கதவனை கட்டப்பட்டுள்ளது

நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்டத்திலிருந்து கரூர் மாவட்டத்திற்கு வேலைக்காகவும் அதுமட்டுமில்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும் இந்த கதவணை வந்து கண்டுகளிக்கின்றனர். மேலும் இந்த பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் இந்த பாலத்தை கடக்க கூடிய பொதுமக்களும் ஒரு அச்சத்திலே கடக்க வேண்டிய சூழல் உள்ளது
இந்த பாலத்தின் இருபுறம் உள்ள தடுப்புச் சுவற்றில் அங்கு கங்கை விரிசல் ஏற்பட்டு உள்ளதால் பெரிய ஓட்டையை காணப்படுகிறது இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் தங்களது குழந்தைகளை கதவனை முழுவதும் சுற்றி பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து விடுமா என்கின்ற ஒரு அச்சத்திலே இந்த பாலத்தை பார்த்து செல்கின்றனர்
இங்கு உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த பாலத்தில் உள்ள விரிசலடைந்த பகுதியை உடனடியாக சரி செய்யவும் மேலும் எந்த ஒரு அசம்பாவிதங்கள் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.








