மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதிக்கு வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது., உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டி மாசானகருப்பு கோவில் அருகில் இந்த கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.,

உடைப்பின் காரணமாக வெளியேறும் குடிநீர் அசுவமா நிதி, 58 கால்வாயில் ஆறாக ஓடி கருக்கட்டான்பட்டி கண்மாயில் நிரம்பி வருகிறது.,
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.,




