கன்னியாகுமரி பெங்களுரூ நான்கு வழிச்சாலையில் நாகமலை புதுக்கோட்டை – துவரிமான் அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் மஞ்சள் வண்ண வேகத்தடை ஏற்படுத்தி உள்ளார்கள்.

இதில் குறிப்பிட்ட அளவை விட அதிகமான உயரமாக இருப்பதால் வேகத்தில் வரும் வாகனங்கள் நிலைத்தடுமாறி அருகில் உள்ள வாகனங்களின் மேல் இடித்து விபத்து ஏற்படுகிறது.
மேலும் வேகமாக வரும் வாகனங்கள் இந்த தடைகளில் ஏறி இறங்குவதால் வாகனங்களில் உள்ள ஜாக்கப்சர் போன்றவை பழுதாகின்றது .ஒரு வாகனத்திற்கு இரண்டு ஜாகப்சர்கள் இருப்பதால் 6000 முதல் 7000 வரை செலவாகிறது.

இதே போல் வாகனங்களில் சேதமாகி உதிரி பாகங்களும் வேகமாக செல்வதால் சேதமடைகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுத்து ஏக தடையை எடுத்துவிட்டு மாற்று வழியாக தடுப்பு அமைப்பு (பேரிக்கார்டு) அமைத்து வாகனங்கள் செல்ல நாகமலை புதுக்கோட்டை CITU வாகன உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வாகன ஓட்டுனர்கள் சங்கம் ஆகியவை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.