மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் பேருந்து நிலையம் பின்புறமும் காவல் நிலையத்திற்கு முன்புறமும் உள்ள குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹோட்டல் கழிவுகள் சாக்கடை நீர் புகுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். கோழி கழிவுகள், திருமண மண்டபத்தில் உண்டாகும் கழிவுகள் ஆகியவை நள்ளிரவு நேரங்களில் வந்து கொட்டப்படுகின்றன. மேலும் குளம் முழுவதும் பாசுபடர்ந்து சுகாதாரமற்ற முறையில் செடிகள் முளைத்து காணப்படுகிறது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். சுகாதாரக் கேடால் அரசு பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேராக குளத்திற்கு செல்வதால் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. தற்போது கேரளத்தில் பரவியுள்ள அமீபா வைரஸ் தமிழகத்தின் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த குளத்தை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று இப்பகுதி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ோரிக்கை விடுத்துள்ளனர்.