மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி கருப்பட்டி அம்மச்சியாபுரம் கட்டக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்கள் மற்றும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக கூடிய சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாத நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மழையில் நனைந்த நெல் குவியல்களை மத்திய குழுவினர் கட்டக்குளம் ஆண்டிபட்டி போடிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து நெல்மாதிரிகளை சேகரித்து சென்றனர்
இந்த நிலையில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆன நிலையில் வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேங்கியுள்ளது இதனால் மழை பெய்யும் பட்சத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகும் சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

மேலும் தினசரி ஆயிரம் முட்டை கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் கூறி வந்த நிலையில் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் குவியல்கள் மற்றும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு சில கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்த நெல் குவியல்களை மறுபடியும் உலர வைத்து காயப்போடும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆகையால் ஏக்கருக்கு பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை உடனடியாக வழங்க வேண்டும் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் குவியல்கள் மற்றும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)