மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளான இரும்பாடி கருப்பட்டி தச்சம்பத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த நிலையில் கொடிக்கால் விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்காததால் சிறிது சிறிதாக மாற்று விவசாயம் செய்ய தங்களை தயார் செய்து வந்தனர்.

இந்த நிலையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த சோழவந்தான் பகுதி விவசாயிகள் தற்போது பத்துக்கும் குறைவான ஏக்கரில் விவசாயம் செய்ய வேண்டிய பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதற்குக் காரணம் கொடிக்கால் விவசாயிகளுக்கு அரசு எந்த ஒரு சலுகைகளையும் மற்றும் கொடிக்கால் விவசாயத்தை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வந்த அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததே காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்ட கொடிக்கால் விவசாயிகள் அச்சம்பத்து விராட்டிபத்து திருப்புவனம் போன்ற வெளியூர்களுக்கு கொடிக்கால் விவசாய வேலைகளுக்கு செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சோழவந்தான் வெற்றிலை தமிழக மற்றுமின்றி உலகம் முழுவதும் பெயர் பெற்ற வெற்றிலையாகும் இந்த வெற்றிலை ஒரு காலத்தில் சோழவந்தானிலிருந்து ரயில் மூலம் மதுரைக்கு தினசரி 1000க்கும் மேற்பட்ட கிலோ கணக்கில் விவசாயிகள் கொண்டு சென்று மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வியாபாரம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது உள்ளூர் வியாபாரிகளுக்கு வெற்றிலை தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதற்கு காரணம் வெற்றிலை விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய அரசு அது குறித்து எந்த ஒரு கவலையும் படாததும் மேலும் சோழவந்தான் பகுதியில் வெற்றிலை விவசாயத்தை வளர்க்க வெற்றிலை ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைத்து வெற்றிலை கொடிக்கால் விவசாயத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்காததே காரணம் என கூறுகின்றனர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தாங்கள் வெற்றி பெற்றால் சோழவந்தான் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து தருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தனர்.
ஆனால் வெற்றி பெற்று வந்த பிறகு அது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை என வெற்றிலை விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் ஆகையால் கொடிக்கால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அதிகப்படியான வெற்றிலையை சோழவந்தான் பகுதியில் விளைவிக்க விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் உடனடியாக வெற்றிலை ஆராய்ச்சி மையம் ஒன்று சோழவந்தான் பகுதியில் அமைத்து மற்ற பகுதிகளில் விளைவிக்கும் வெற்றிலையை சோழவந்தான் பகுதிக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மீண்டும் எடுக்க வேண்டும்.

முன்பிருந்தது போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சோழவந்தான் வெற்றிலையை கொண்டு சென்று அதன் புகழை பரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என இந்த பகுதி வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போதுள்ள சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு வெங்கடேசன் அவர்கள் சோழவந்தான் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
 
                               
                  












; ?>)
; ?>)
; ?>)