• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

லூர்தம்மாள் சைமனுக்கு கூடிய சிலை அமைக்க கோரிக்கை..,

பெரும் தலைவர் காமராஜர் அமைச்சரவையில்.
குமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்றத்தில் இருந்து 1962, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் லூர்தம்மாள் சைமன்.

காமராஜர் அமைச்சரவையில் குமரியிலிருந்து, அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் என்ற பெருமை இன்றுவரை தொடர்கிறது.

பெருந்தலைவரின் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சாரக இருந்த லூர்தம்மாள் சைமனின்,அன்றைய தொலை நோக்கு பார்வையில் உருவானது தான். மீனவர்கள் வாழ்வில் மீன்பிடி தொழிலில் ஏற்படுத்திய புரட்சி மீன் பிடிக்க இயந்திர படகுகள் என்பது.

குமரி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் என்பதோடு 47_மீனவ கிராமங்களை உள்ளடக்கிய மாவட்டம். இங்கிருந்து தான் மீன்பிடி தொழிலில் இயந்திர படகு என்னும், கடலில் மீன்பிடிக்க ஒரு புதிய பார்வை தொடங்கியது. கட்டு மரங்கள் மூலம் மீன் பிடித்த காலத்தில். கடலில் அதிக தூரம் செல்ல முடியாது, அன்று கடலில் தங்கி மீன் பிடிப்பதா.?கற்பனைக்கே எட்டாதது.

மீன்பிடி இயந்திர படகுகளின் விலை கட்டுமரத்தை விட பல மடங்கு அதிகம். தனி ஒரு மீனவனால் இயந்திர படகு சாத்தியமாகாது என்பதை உணர்ந்த, அந்தத் துறையின் அமைச்சராக இருந்த லூர்தம்மாள், அன்றைய முதல்வர் காமராஜரும்,துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனையில் உருவானது மீனவர்கள் கூட்டுறவு சங்கம்.

மீனவர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக வேண்டும். தனி ஒரு மீனவர் என்பது சிலர் அடங்கிய குழுவாக இணைந்து. அவர்கள் அங்கம் வகிக்கும் ஊர்களில் உள்ள மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் இயந்திர படகுக்கு மனு செய்யும் குழுக்கள் “குலுக்கல்”மூலம்”தேர்வு பெற்றது தமிழக மீனவர்கள் வாழ்வில் ஒரு வரலாற்று கல்வெட்டு சாதனை.

இன்று தமிழக கடலில் துள்ளி வரும் அலை கூட்டத்தை கிழித்துக் கொண்டு சீரிப்பாயும் நவீன இயந்திர படகுகளுக்கு விதை போட்டவர் மீன்வளத்துறை யின் அமைச்சராக இருந்த குமரியை சேர்ந்த லூர்தம்மாள் சைமன்.

குமரியம்மன் என்னும் பெண் தெய்வத்தின் பெயரில் ஆன மாவட்டத்தில் முதல் பெண் அமைச்சரான லூர்தம்மாள்சைமனுக்கு குமரியில் மணி மண்டபத்துடன் கூடிய சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் (லூர்தம்மாள் சைமனின் பேத்தி முறை உறவினர்) கூட்டாக முதல்வர்
மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து

லூர்தம்மாள் சைமனின் நூற்றாண்டை கொண்டாடும், இந்த கால கட்டத்தில்.
குமரியில் சிலை உடன் கூடிய மணி மண்டபம் எழுப்பி. லூர்தம்மாள் சைமனுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினும் லூர்தம்மாள் சைமனின் அமைச்சர் கால பெருமைமிகு நல்ல சாதனைகளை நினைவு கூர்ந்தார்.

கன்னியாகுமரியை அடுத்த மணக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர். மணக்குடி மேம்பாலத்திற்கு ஏற்கனவே இவரது நினைவை போற்றும் வகையில் லூர்தம்மாள்சைமன் மேம்பாலம் என நினைவு கூறப்படுகிறது.