மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் வயது மூப்பு மற்றும் நோய் தொற்று காரணமாக இறந்து கிடக்கும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான் வைகை ஆற்று பாலம் நடுவில் தெரு நாய் ஒன்று இறந்து இரண்டு நாட்கள் ஆகியும் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதே போன்று காமராஜர் சிலை அருகில் கழிவுநீர் கால்வாயில் இறந்து கிடக்கும் தெரு நாய் வயிறு உப்பி துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய இறந்து கிடக்கும் நாய்களை உடனடியாக அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.