விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் வலையபட்டி கிராமத்தில் மயானத்தில் இருந்த அடிபம்பை அகற்றிவிட்டு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்து தருவதாகஅதிகாரிகள் தெரிவித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அடி பம்பை அகற்றிவிட்டு சென்றனர்.

ஆனால் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி இன்றுவரை அமைக்கப்படவில்லை. இதனால் மயானத்திற்கு வந்து திரும்பும்போது தண்ணீர் இல்லாமல் அவதிப்பட வேண்டி உள்ளது ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தரைமட்ட நீர்த்தக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்