மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் அமைந்துள்ளது சித்த நவனான் வகையாறாவிற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் திருக்கோவில்.,
சுமார் 300 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாத சூழலில், கிராம மக்கள் மற்றும் கோவில் கமிட்டியினர் சாலை வசதி அமைத்து தர வருவாய்த்துறை அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தனர்.

இந்த தொடர் கோரிக்கையின் அடிப்படையில், வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து அளவீட்டு சாலை அமைக்க தேவையான ஆக்கிரமிப்புகளை மீட்டெடுத்தனர்.
விரைவில் கோவிலுக்கு சென்று வரும் அளவு சாலை அமைக்க முழுமையாக ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.














; ?>)
; ?>)
; ?>)