பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வனத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென வனஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் மலைச்சாலையில் அமர்ந்து மது அருந்துவது, புகைப்பிடிப்பது, உணவு கழிவுகளை வீசுவது, பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி எறிவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் வனப்பகுதியில் சுற்றித்திரியும் வனவிலங்குகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகின்றன. இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், சுற்றுலா பயணிகள் தூக்கி எறியும் பாட்டில்கள் உடைவதால், அதனை மிதிக்கும் வனவிலங்குகள் காயமடைகின்றன. சுற்றுலா பயணிகள் வீசிஎறியும் உணவுகள் உண்ணும்போது வனவிலங்குகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றன.
எனவே, சுற்றுலா பயணிகள் மலைச்சாலையில் செல்லும்போது மது அருந்தக்கூடாது. புகை பிடிக்கக் கூடாது. விலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது. தண்ணீர் பாட்டில் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாதென அறிவுறுத்தி வருகிறோம். சோதனையும் மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனால், சுற்றுலா பயணிகளிடமும் சுய விழிப்புணர்வு மற்றும் அக்கறை இருக்க வேண்டும்’’ என்றனர்.













; ?>)
; ?>)
; ?>)