• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தேசிய தலைவர் படத்திற்கு வரி விலக்க அளிக்க கோரிக்கை..,

ByP.Thangapandi

Nov 9, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள அரவிந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் பஷீர் நடிப்பில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு வெளியான தேசிய தலைவர் திரைப்படத்தை படக்குழுவினர், உசிலம்பட்டி பாரதிய பார்வட் ப்ளாக், தமிழ் தேசிய பார்வட் ப்ளாக் தலைவர்களுடன் இணைந்து கண்டு ரசித்தனர்.,

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தலைவர் பட நாயகன் பஷீர், இந்த படத்தில் நடித்ததன் மூலம் இந்த ஜென்மத்திற்கான பலனை அடைந்துவிட்டேன் என்றும்,

ஒவ்வொரு தியேட்டர்களுக்கும் சென்று வரும் போது எழுச்சி மிக்க பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க வாழ்க என கை தட்டல்களும், விசில் சத்தமும் தான் கடந்த 10 நாட்களாக எனது காதுகளில் கேட்க முடிகிறது.,

விஜய், ரஜினி படம் மாதிரி இருக்கிறது என சொல்கிறார்கள், ஆனால் ஒவ்வொருவரும் கோவிலுக்கு செல்வது போன்று தியேட்டருக்கு வருகின்றனர்.,

ஏழாம் படை முருகனாக தேவரை சொல்வார்கள், இந்த உசிலம்பட்டிக்கு நான் வரும் போது அவர் சார்ந்த சமுதாய மக்கள் வரவேற்பது சந்தோசமாக இருக்கிறது., உலகம் முழுவதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழை கொண்டு சேர்ப்பதில் எனக்கும் ஒரு பங்காக மாறியுள்ளது.,

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு ஜாதிய தலைவர் அல்ல தேசிய தலைவர் என்று சொல்லும் படம் இது, தமிழ்நாட்டிலேயே அதிகமான வரவேற்பு உசிலம்பட்டியில் தான் கிடைத்துள்ளது., என பேட்டியளித்தார்.,

தொடர்ந்து பேசிய பாரதிய பார்வட் ப்ளாக் தலைவர் முருகன்ஜி, சுதந்திர போராட்ட வீரர், மறைக்கப்பட்ட வரலாறுகளையும், எண்ணற்ற விமர்சனங்களுக்கு மத்தியில் யார் மனதும் புண்படாமல் எடுத்துள்ள படக்குழுவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.,

இந்த பகுதியில் உள்ள அனைத்து பார்வட் ப்ளாக் அமைப்புகள், தேவரின் திருத்தொண்டர்கள் சார்பில் ஒட்டுமொத்தமாக வைக்கும் கோரிக்கை எப்படி சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு வரி விலக்கு அளித்தது போல பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்று படமான தேசிய தலைவர் படத்திற்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.,