குமரியில் திருக்கோவில்களின் கும்பாபிஷேகத்திற்கு ரூ24.50 லட்ச மதிப்பீட்டில் திருப்பணிகளை பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
சுசீந்திரம் பேரம்பலம் நடராஜமூர்த்தி திருக்கோயிலில் தமிழக சட்டசபை அறிவிப்பு 2023-24 ன்படி, மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, மாண்புமிகு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் வழிகாட்டுதலின் படியும் ரூ. 24.50 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்க விழா சிறப்பு பூஜை இன்று நடைபெற்றது. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

இதுபோல் தெற்கு மண் இரட்டை தெரு குலசேகர பெருமாள் திருக்கோயில் ரூ. 11.40 லட்சம் செலவில் திருப்பணி வேலைகளும் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், தேவசம் பொறியாளர் ராஜ்குமார், ஒப்பந்தக்காரர் மோகன் தாஸ் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.
