• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அக்னி சட்டி எடுத்து வரும் பகுதிகள் சீரமைப்பு..,

ByKalamegam Viswanathan

Jun 8, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான அக்னிச்சட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்வு நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் பால்குடம் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.

வைகை ஆற்றில் இருந்து பால்குடம் அக்னி சட்டி எடுத்து வரும் பக்தர்கள் சோழவந்தான் மருது மகா மரியாதை பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி மேலரத வீதி வடக்கு ராத வீதி திரோபதை அம்மன் கோவில் தெரு முத்துக்குமரன் நகை மாளிகை பகுதி உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம் பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் முக்கிய நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோழவந்தானின் தெற்கு ரத வீதி மேலரத வீதி ஆகிய பகுதிகளில் சாலை அமைக்க பணிகளை மேற்கொண்டனர் பால்குடம் அக்னிசட்டி எடுத்தும் 1000க்கும் மேற்பட்டோர் உருண்டு கொடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்த உள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று நடைபெற்று வருகிறது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளை பக்தர்கள் பாராட்டினர். இதேபோன்று சோழவந்தானின் அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகளை முழுவதுமாக செய்ய வேண்டும்.

குறிப்பாக வைகை ஆற்றுப்பகுதி மார்க்கெட் அருகே உள்ள பதினெட்டாம்படி கருப்புசாமி கோவில் பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் குடிநீர் சின்டெக்ஸ் குழாய்கள் அதிக அளவில் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.