சாத்தூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்சிக் கொடிகள், பேனர்கள் அகற்றம் செய்ய, பொதுமக்கள் புகாரை அடுத்து நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்சி பேனர்கள், கொடிகள் ஆகியன உள்ளதாகவும், அதனை அகற்றும் படியும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறையினரிடம் புகார் அளித்து வந்தனர்.


இதனை அடுத்து சாத்தூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாத்தூர் மெயின் ரோடு முக்குராந்தல் பகுதி பேருந்து நிலையம் உள்ளிட்ட அதிக போக்குவரத்து உள்ள பகுதிகள் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள விளம்பர பலகைகள் கட்சி பேனர்கள் மற்றும் கட்சி கொடி கம்பங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கட்சிக்கொடி கம்பங்களை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் காவல்துறை உதவி கொண்டு இப்பணியை மேற்கொண்டனர்.
