கன்னியாகுமரி ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில். குமரி சமூக விடியல் மாநாடு நடைபெற்றது. இதில் இயக்கத்தின் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். முத்துக்குட்டி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் அருட்பணி ராஜன். தாய்மை பற்றி உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுவாமி தோப்பு பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார். விவேகானந்தர் எப்படி அவரது தலைப்பாகை அணிந்தது குறித்து தெரிவித்தார். நிகழ்வில் அருட்திரு இம்மானுவேல், டாக்டர்.ஏசுவடியான், இயற்கை ஆர்வலர் பேராசியை சுவாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
யூஆர் ஐ இயக்கத்தில் ஏராளமான இளைஞர்களை பங்கேற்கும் வகையில் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். இந்தியாவில் இளைஞ்சர்கள் சமுகம் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ளது.
நாளைய உலகை வழி நடத்தப்போவது, இந்த இளைஞர்கள் கூட்டம் தான் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் நம்முடைய
நிகழ்வுகளை திட்டமிடல் வேண்டும் என்ற பொருளில் கூட்டத்தினர் உரையாற்றினார்கள்.













; ?>)
; ?>)
; ?>)