• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பி.ஜெ.பி சார்பில் நிவாரண பொருட்கள்..

ByM.I.MOHAMMED FAROOK

Dec 6, 2025

காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காரைக்கால் வடக்கு தொகுதிக்குட்பட்ட அன்புநகர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக முன்னாள் ஓ.பி.சி அணி தலைவர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோருக்கு மழை நிவாரணமாக அத்தியாவசிய பொருளான பால், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கினார்.

இதில் முன்னாள் பாஜக மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.