• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

500 ரூபாய்க்கு ஜியோ ஃபோன் – அம்பானியின் நெக்ஸ்ட் மூவ்!

By

Sep 3, 2021
JIO

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன் செப்டம்பர் 10ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மலிவான விலையில் அல்டரா அஃப்பர்டபிள் 4ஜி ஸ்மார்ட் போனை உருவாக்கி உள்ளது. ஜியோ போன் நெக்ஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், 2 மாடல்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ரிலையன்ஸ் நிறுவனம் விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 10ம் தேதி அறிமுகப்படுத்துகிறது.

பேசிக் ஃபீச்சர்ஸ் வசதி கொண்ட ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன் 5000 ரூபாயும் மேம்பட்ட வசதி கொண்ட மற்றொரு ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன் 7000 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை குறித்து இன்னும் தெளிவான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.இருப்பினும் 10% கட்டணத்தை மட்டும் செலுத்தி ஸ்மார்ட் போனை பெற்றுக் கொள்ளலாம். எஞ்சிய கட்டணத்தை நீண்ட கால தவணையில் செலுத்தும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.பாரத ஸ்டேட் வங்கி, பிரைமல் கேபிடல் , ஐடிஎஃப்சி மற்றும் டிஎம்ஐ பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் தவணை வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் வட்டி வசூலிக்கப்படுமா? இல்லையா ? என்பது குறித்தும் இந்த நிறுவனம் தெளிவாக விளக்கவில்லை. அடுத்த 6 மாதங்களில் 5 கோடி ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போனை விற்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது