• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மோகன்லால் நடித்துள்ள ப்ரோடேடி வலைத்தளத்தில் வெளியீடு

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ப்ரோ டேடி’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

நடிகர் பிரித்விராஜ் இரண்டாவதாக இயக்கியுள்ள ‘ப்ரோ டேடி’ படத்தில் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவைக் கொண்ட குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லாலுடன் பிரித்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான ‘லூசிஃபர்’ சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்தது.

தற்போது, இரண்டாவது முறையும் மோகன்லாலுடன் இணைந்துள்ளதால்‘ப்ரோ டேடி’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் படம் நேரடியாக விரைவில் வெளியாகிறது என்று தேதியைக் குறிப்பிடாமல் படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி வரும் ஜனவரி 26 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ‘ப்ரோ டேடி’ வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.