• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விஜய்சேதுபதி கால்ஷீட் பிரச்சினையால் விடுதலை வெளியாவது தாமதம்

பலமொழி படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் நடிகர் விஜய்சேதுபதி தேதி ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விடுதலை திரைப்படத்தை திட்டமிட்ட அடிப்படையில் மார்ச்சில் வெளியிட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ், மலையாள படங்களில் நடித்து வரும் காமெடி நடிகர் புரோட்டா சூரி கதையின் நாயகனாக நடித்து வரும்படம் விடுதலை தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதை களங்களை திரைக்கதை வடிவமாக்கி ஆடுகளம், பொல்லாதவன், விசாரணை, அசுரன் போன்ற படங்களை இயக்கிய வெற்றி மாறன் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நடிகர்விஜய் சேதுபதி மற்றும் பிரகாஷ் ராஜ், இயக்குனர் கவுதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். அதோடு ஜெய் பீம் படத்தில் கொடூர காவலராக தோன்றி மிரட்டியிருந்த தமிழ், இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததோடு காவலராகவும் நடித்துள்ளார்.

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

ஆனால் இறுதி கட்ட படப்பிடிப்பு திடீர் என நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படாது.. முன்னதாக வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இல்லாதால் படம் தள்ளிப்போனதாக சொல்லப்பட்ட்து.

பின்னர் மீண்டும் துவங்கிய விடுதலை படம் பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருப்பதற்கு கரணம். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைக்காததே என சொல்லப்படுகிறது…