• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரேக்ளா, மாட்டு வண்டி பந்தயம் – அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு !!!

BySeenu

Apr 6, 2025

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை வடக்கு மாவட்ட தி.மு.க கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில், கால்நடை கலாச்சாரம் மற்றும் ரேக்ளா பாதுகாப்பு சங்கம் இணைந்து மூன்றாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை கோவை கணுவாய் பகுதியில் நடத்தியது.

இப்போட்டியில் கலந்து கொண்ட, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடி அசைத்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி ,

முதல்வர் பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இது போன்ற போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இங்கு போட்டியை நடத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு நானும் முதலமைச்சர் சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

இப் போட்டியில் இரட்டை பெரிய மாடு கொண்ட பந்தயத்தில் கலந்து கொண்ட பெரிய இரட்டை மாட்டிற்கு முதல் பரிசாக இருபதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது, சிறிய மாட்டிற்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், போட்டியில் வென்ற பெரிய குதிரைக்கு முதல் பரிசாக, இருபதாயிரம் ரூபாயும், போட்டிகள் வென்ற சிறிய குதிரைக்கு 15 ஆயிரம் ரூபாயும், புதிய குதிரைக்கு முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், பரிசு கோப்பைகளும் அமைச்சர் செந்தில் பாலாஜியால் வழங்கப்பட்டது.