மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ளது மொக்கத்தான்பாறை கிராமம்., சுமார் 20க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வரும் இந்த கிராமத்தில் முறையான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்றே பள்ளிக்கு சென்று வரும் நிலை உள்ளதாக கூறி பள்ளிக்கு செல்ல மறுத்து மழைவாழ் மக்களின் குழந்தைகள் மலைக்கே சென்றுவிட்டதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்., இந்த ஆய்வின் போது மலைவாழ் மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்ததுடன், குழந்தைகள் ஏன் பள்ளிக்கு செல்ல மறுக்கின்றனர், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செல்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், கிராமத்திலும் உள்ள பல்வேறு அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக மலைவாழ் மக்களிடம் உறுதியளித்து சென்றார்.