• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

விருதுக்கு தேர்வானபரத் நடித்துள்ள நடுவன்

நடிகர் பரத் நடித்த ‘நடுவன்’ திரைப்படம் 12-வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நடிகர்கள் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், யோக் ஜப்பே, சார்லி மற்றும் பலர் இப்படத்தில்
நடித்துள்ளனர்.இயக்குநர் ஷரன் குமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார் யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்
‘நடுவன்’ திரைப்படம் 12-வது ‘தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழா’வில் திரையிடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
குறித்து நடுவன் படத்தின் இயக்குநரான ஷரன் குமார் கூறும்போது, 12-வது தாதா சாஹேப் பால்கே’ திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக எங்கள் படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கேட்டு, எங்கள் குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது. எங்கள் படத்தினை தேர்வு செய்த ஜூரி மெம்பர்களுக்கு நன்றி.

பாராட்டுக்கள் எந்த வடிவத்தில் கிடைத்தாலும் அது எப்போதும் வரவேற்கத்தகுந்ததே. எங்கள் திரைப்படம் வெளியான போதிலிருந்தே நேர்மறையான வரவேற்பைப் பெற்று, உலகம் முழுவதும் பாராட்டுகளை குவித்து வருகிறது.உலக திரைப்பட திருவிழாவான சிங்கப்பூர், இந்தோ மலேசியா சர்வதேச திரைப்பட விழா, மொக்கோ சர்வதேச திரைப்பட விழா புதுச்சேரி போன்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் உலகெங்கிலும் எங்கள் படம் விருதுகளை வென்றுள்ளது.
செப்டம்பர் 2021 இல் ஓடிடி பிளாட்ஃபார்மில் (Sony LIV) வெளியான பிறகும், இந்த விழாக்களில் எங்கள் திரைப்படம் அங்கீகாரம் பெறுவது எங்கள் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு ஒரு சிறந்த உந்துதலாக உள்ளது.
எனது தயாரிப்பாளர் லக்கி சாஜர், நடிகர் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆகியோருடன், நான் நினைத்தது போலவே படத்தை வடிவமைக்க, தூணாக இருந்த ஒட்டு மொத்த தொழில் நுட்பக் குழுவினருக்கும் இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய மரியாதைகள், நல்ல உள்ளடக்கம் சார்ந்த கதைகளை இயக்கவும், சிறந்த படங்களை தொடர்ந்து வழங்கவும் பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தருகிறதுஎன்றார்.