விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பி எஸ் கே நகரில் வசித்து வரும் கோடீஸ்வர ராவ் வயது 38 என்பவரது மனைவி பரிமளா ( வயது 34) இவர் பி.டெக்., படித்து முடித்து இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து தற்போது ராஜபாளையம் வந்து கணவருடன் வசித்து வருகிறார்.

இவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அகஸ்டின் நந்தினி வேணுகோபால் என்ற மாஸ்டரிடம் கீ போர்டு வாசிக்க கற்றுக்கொண்டார். மேலும் ஒரு மணி நேரத்தில் 1046 முறைக்கும் மேலாக கீபோர்டு தொடர்ந்து வாசித்து பயிற்சி பெற்றார். அதன் பின்னர் 18 நாடுகள் ஆன்லைன் மூலம் கீபோர்டு வாசிக்கும் ஸும் போட்டியில் பங்கேற்றார். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 18 நாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் ஒரே சமயத்தில் கீபோர்டு வாசிக்கும் நிகழ்ச்சியில் ஜூம் போட்டியில் பரிமளா பங்கேற்றார். 148 பேர் இதில் போட்டியிட்டனர்.

இதில் பங்கேற்று சாதனை படைத்தமைக்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலிருந்து பரிமளாவுக்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவரது கணவர் கோட்டீஸ்வர ராவ் ராஜபாளையத்தில் உள்ள ஐடிபிஐ வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து கீபோர்டில் பல்வேறு நுட்பங்களை கற்று தேர்ந்து மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க பரிமளா விருப்பம் தெரிவித்துள்ளார்.