• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உள்ளாச்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் ; அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேட்டி

By

Sep 5, 2021 ,

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.ஊ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து ,நடைபெற்ற நிகழ்ச்சி 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில் தமிழகத்தில் விடுபட்டுப் போன 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எந்த நேரத்தில் நடத்தினாலும் சந்திக்க திமுக தயாராக உள்ளது என தெரிவித்தார்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை தயாராக உள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என்று கூறினார் .சிவகங்கையில் வழக்கமாக 12 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 9 பேருக்கு வழங்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் குறைந்த எண்ணிக்கையில் நல்லாசிரியர்கள் விருது வழங்கப்பட்டதில் உள்நோக்கம் இல்லை என்றார்.மேலும் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பகுதிகளில் மக்கள் கருத்து கேட்ட பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .