• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மீண்டும் திறக்கப்படும் முதுமலை சுற்றுலா

By

Sep 3, 2021 ,

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை சுற்றுலா மையமானது கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று திறக்கப்படுகிறது.
முதுமலை சுற்றுலா மையத்தில் முதல் கட்டமாக இன்று வாகன சவாரி மட்டும் தொடங்கப்படுகிறது. 6-ம் தேதி முதல் யானைகள் சவாரி தொடங்குகிறது. அதன்படி வாகனங்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதுமலை சுற்றுலா மையம் மூடப்பட்டது.