நாடார் மஹாஜன சங்கத்தை* தோற்றுவித்த பொறையார் ராவ் பகதூர்* இரத்தினசாமி நாடார்* அவர்களின் 160வது பிறந்தநாள் விழா,சிவகாசி நாடார் மகாஜன சங்கம் சார்பாக மண்டல தலைவர் V.கண்ணன் அவர்கள் அலுவலகத்தில் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் நாடார் மகாஜன சங்க இளைஞரணி நிர்வாகிகள், மேட்டமலை நாடார் உறவின்முறை நிர்வாகிகள், தாயில்பட்டி நாடார் உறவின்முறை நிர்வாகிகள், சிவகாசி மேற்கு பகுதி நாடார் உறவின்முறை நிர்வாகிகள், பாண்டியன்நகர் நாடார் உறவின்முறை நிர்வாகிகள், மற்றும் நாடார் மகாஜன சங்க. மாவட்ட செயலாளர், மாநகர தலைவர் மற்றும் மகாஜன சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இன்நன்னாளில் சமூக நல்லிணக்கத்தோடு சமதர்மம் உருவாக பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிசலில் பலியான அனைத்து உயிர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை நாடார் மகாஜன சங்க நிர்வாகி அறிவொளி ஆண்டவர் செய்திருந்தார்.
