• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

Byவிஷா

Jun 27, 2025

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகஸ்ரா என்ற மாணவி மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
2025-26ம் ஆண்டு பொறியியல் மாணவர் சேர்கைக்கான தரவரிசை பட்டியலை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அலுவலகத்தில் இன்று காலை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டார்.
மாணவர்களுக்கு கட் ஆஃப் மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியீடு. www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தரவரிசையை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகஸ்ரா, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கார்த்திகா(நாமக்கல்), அமலன் ஆன்டோ(அரியலூர்) ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களில் 7 இடங்களை மாணவிகள் பெற்றுள்ளனர்.
7.5சதவீத இடஒதுக்கீட்டில் தாரணி(கடலூர்), மைதிலி(சென்னை), முரளிதரன்(கடலூர்) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19 வரை நடைபெறும் என்றும் சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 7 ஆம் தேதி தொடங்கும். துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.