“ எப்படிமா இப்படி நன்றி சொல்றீங்க …. ரங்கநாயகினா கொக்கா! சூப்பரோ சூப்பர் என்று திமுகவினர் நெகிழ்ந்து மகிழ்ந்த சம்பவம் தான்” கோவை புதிய மேயர் ரங்கநாயகி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த சம்பவம் தான் திமுகவினரையே அசர வைத்திருக்கின்றது.
அப்படி உற்சாகமாக பேட்டி அளித்த பேட்டியை பார்ப்போமா ….
எனக்கு இந்த பதிவை அளித்த கலைஞருக்கும், முதல்வருக்கும், சின்னவர் அவருக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், அண்ணன் செந்தில் பாலாஜிக்கும், துறை அமைச்சருக்கும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கும், திமுக செயலாளர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் துணை மேயர் ஆணையாளர், கவுன்சிலர்களுக்கும் கட்சியின் உடன்பிறப்புகளுக்கும், அரசு துறைச் சார்ந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கிறார்.
நான் இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளேன். தற்போது என் தன்னுடைய வார்டை பற்றி தான் முழுமையாக தெரியும். இனி அனைவரிடமும் ஆலோசித்து எது அவசியம் எது அவசரம் என எல்லோருடைய சொல்லுக்கும் செயல்படுவேன். நான் என்ன செய்கிறேன் என பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கண்டிப்பாக கொடுப்பேன். குடிநீர் பிரச்சனை நன்றாக தான் போய்க்கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கிறார்.









