• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கிய ராம ஸ்ரீனிவாசன்..,

ByP.Thangapandi

Dec 27, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அரசு கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்த 30க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும், மாணவ மாணவிகளுக்கும் தனியார் அமைப்பு சார்பில் விருது வழங்கி கௌரவ படுத்தி, ஊக்கப்படுத்தும் நிகழ்வில் பாஜக மாநில செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி, பாராட்டினார்.,

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ராமஸ்ரீனிவசன்.,

பிரமலைக்கள்ளர்களுக்கு எதிராகவும், அவர்கள் குற்றப் பழங்குடியினர்களாக வீட்டை விட்டு வெளியேறவே முடியாத அளவு ஒடுக்கப்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்தது நீதிக்கட்சி., இன்று சமூக நீதி பேசும் நீதிக்கட்சியின் வாரிசுகள் என பெருமை கொள்ளும் ஸ்டாலின் இன்று விளக்கம் சொல்வாரா, இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி இடத்தில் தான் கனிமொழி நிகழ்ச்சி நடக்கிறது அவர்கள் விளக்கம் கொடுப்பார்களா, இத்தனை லட்சம் மக்களுக்கு செய்த அநீதிக்கு என்ன பரிகாரம்., நீதிகட்சி மக்களுக்கு செய்தது துரோகம் மட்டுமே.,

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை நீதிமன்ற உத்தரவு படி ஏற்ற வேண்டும், இரண்டு லிட்டர், தீ பட்டியுடன் முடியும் விஷயத்தை திமுக உலகமெல்லாம் மிக பெரிய செய்தியாக மாற்றியுள்ளார்கள், அங்கு இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பிரச்சனை இல்லாத ஒரு இடத்தில், உலகம் முழுவதும் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பிரச்சினை இருக்கு என சொல்லப்பட்டுள்ளது., தீப ஏற்றுவதிற்கு எந்த இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.,

சர்வே தூண் என முதன்முதலில் சொன்னவர் கனிமொழி தான், வழக்கு இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருந்த போது தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சர்வே தூண் என குறிப்பிடப்பட்டதா., அது தீபத்தூண் இல்லை என்றும் குறிப்பிடவில்லை.,

வாய்க்கு வந்ததை பேசுவது, வசதிக்கு ஏற்றார் போல பேசுவது, பொய்யா பேசுவது, சாதூரியமாக பேசுகிறேன் என்று திரும்ப திரும்ப பொய் சொல்வது, இந்துக்களுக்கு அநீதியை விளைவிப்பது., திமுக செய்வதெல்லாம் இந்துக்களுக்கு செய்யும் துரோகம், இந்துக்களுக்கு செய்யும் அநீதி., இந்துக்களை சொந்த மண்ணில், தமிழ்நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் பணிகளை திமுக செய்கிறது., இதற்கு அரசியல் ரீதியாக வரும் 2026 தேர்தலில் திமுக மிக பெரிய விலை கொடுப்பார்கள்.,

இன்று யார் தான் போராடவில்லை, ஆசிரியர்கள், செவிலியர்கள் போராடுகிறார்கள், அரசு ஊழியர்கள் போராடுகிறார்கள், காவல்துறையினர் மட்டுமே போராடவில்லை, அவர்களுக்கு அந்த வாய்ப்பில்லை., அவர்களுமே உள்ளுக்குள் குமுறிட்டு இருக்கிறார்கள்., எல்லோரையும் ஏமாற்றுகிறது இந்த திமுக.,

தூய்மை பணியாளர்கள் ஒடுக்கப்பட்ட, விழிம்பு நிலை மக்கள் அவர்களுக்காக தான் நான் அரசியல் நடத்துகிறேன் என சொல்லும் திருமாவளவனே அவர்களுக்காக அரசியல் செய்யவில்லை, அவர்கள் கோரிக்கைக்காக பேசவில்லை, வென்றெடுக்கவில்லை., எல்லாத்தையும் ஏமாற்றும் ஒரு கட்சி இருக்கிறதென்றால் திமுக, எல்லாத்தையும் ஏமாற்றும் ஒரு மாடல் பெயர் திராவிட மாடல் மக்கள் பாடம் புகட்டுவார்கள்., என பேட்டியளித்தார்.,