• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராஜூவ் காந்தி 34_வது நினைவு ஜோதி சுடர் யாத்திரை.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தின் திரும்பெரும் புதூரில், தீவிரவாதிகளின் மனித குண்டு தாக்குதலில் மரணம் அடைந்தார்.

பெங்களூரா காங்கிரஸ் தெழில் சங்கம் தலைவராக இருந்த பிரகாசம் தலைமையில் ராஜீவ்காந்தி முதல் நினைவு தினத்தில், பிரகாசம் தலைமையில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதி யாத்திரை. பெங்களூரில் தொடங்கி கேரள மாநிலம் வழியாக, தமிழகம் பகுதியான குமரி மாவட்டம் வந்து இங்கிருந்து புறப்பட்டு ராஜீவ் காந்தி நினைவு தினமான மே திங்கள் 21_ம் தேதி திருவல்லிபுத்தூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஜோதியை வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.

இந்த ஆண்டும் கடந்த மே15யில் பெங்களூராவில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு (மே_17) கன்னியாகுமரி வந்தனர். இந்த குழுவினர் இன்று காலை கன்னியாகுமரியில் தேசத்தந்தை அண்ணல் காந்தி நினைவு மண்டபத்தில் அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை குழுவினரை, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார், குளச்சல் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் உதயம், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் தாமஸ் ஆகியோர் வரவேற்று வாழ்த்தினர்.

கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ஜோதியாத்திரையை எதிர் வரும் மே 21_ம் தேதி திருபெரும்புதூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெரும்தகை வரவேற்கிறார்.