லண்டனில் முதல் சிம்பொனி இசைநிகழ்ச்சியை அரங்கேற்ற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், பண்ணைப்புரத்தில் பிறந்த இளையராஜா தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார். இவர் ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டலில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இன்று (மார்ச்.8) அரங்கேற்றம் செய்ய உள்ளார். இதையொட்டி, அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்களும், நடிகர் கமல்ஹாசன் உள்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இளையராஜாவை வாழ்த்தியுள்ளார். ,இது தொடர்பாக ரஜினிகாந்த் தது எக்ஸ் தளத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், #IncredibleIlaiyaraaja என்ற ஹேஷ்டேகையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.