• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

இணையத்தை தெறிக்கவிடும் ரஜினி – 169 அறிவிப்பு!

ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படம் பற்றிய மாஸான முக்கிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. இதன் படி பீஸ்ட் படத்தில் விஜய்யை தொடர்ந்து, தலைவர் 169 படத்தில் ரஜினியை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளது உறுதியாகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் மெகா பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட் படத்தை தயாரித்து வருகிறது. இதில் எதற்கும் துணிந்தவன் மார்ச் 10 ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படமும் ரிலீசிற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் எப்போது என கேட்டு வந்த ரசிகர்களுக்கு, புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு குஷிப்படுத்தியது சன் பிக்சர்ஸ். அதாவது பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான அரபிக்குத்து பாடல் பிப்ரவரி 14 ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தது. இதற்காக அனிருத், நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன் மூன்று பேரும் பாட்டை தயார் செய்து, விஜய்யிடம் போனில் பேசவது போலவும், பதிலுக்கு இவர்களை விஜய் கலாய்ப்பது போலவும் ஸ்பெஷலான ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்கள்.

இந்த ப்ரோமோ வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை பெற்றது. இதைத் தொடர்ந்து அரபிக் குத்து பாடலுக்கான அடுத்த ப்ரோமோவை பிப்ரவரி 10 ம் தேதி வெளியிட போகிறார்கள் என்றும், இதில் விஜய்யுடன் இருப்பார்கள் என்றும், சிவகார்த்திகேயன் எழுதிய பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடுவது போல் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் Announcement Alert என்ற வாசகத்துடன் இன்று மாலை 6 மணிக்கு என குறிப்பிட்டு, பெரிய கடிகாரம் சுற்றி வந்து 6 மணியை காட்டுவது போல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் இது தலைவர் 169 அறிவிப்பா அல்லது பீஸ்ட் பற்றிய அறிவிப்பா என ஆர்வமாக கேட்டு வந்தனர். ட்விட்டரில் #Thalaivar169 என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டது.

ரஜினியின் 169 வது படமான தலைவர் 169 படத்தை டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்க போவதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலைவர் 169 படத்திற்காக பல டைரக்டர்களின் பெயர்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், சிவகார்த்திகேயன், விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் நெல்சன் திலீப்குமார். எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக ரஜினியுடன் கைகோர்க்கிறது சன் பிக்சர்ஸ். ரஜினியின் பேட்ட, தர்பார் படங்களை தொடர்ந்து தலைவர் 169 படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார்.

ஏப்ரல் 14 ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று தலைவர் 169 படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாம். அதைத் தொடர்ந்து மே மாதம் தலைவர் 169 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த ஊரில் ஷுட்டிங் துவங்க உள்ளது என்பது விரைவில் முடிவு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்ணாத்த படத்தின் ஷுட்டிங் பொள்ளாச்சி, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.