மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அதிமுக ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் காமராஜ் ஆகியோர்கள் ஏற்பாட்டில் அக்கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் அதிமுக ஓபிஎஸ் அணியில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் முன்னிலையில் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். கட்சியில் இணைந்த அனைவருக்கும் கட்சி வேஷ்டி அணிவித்து அவர்களை கட்சியில் இணைத்து கொண்டார்.

இதில் அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பிரபு, ஜான்சன், கோஸ்மீன், அய்யணார்குளம் ஜெயக்குமார், செல்லம்பட்டி சவுந்திரபாண்டி, காசிநாதன், சவுந்திரபாண்டி, எழுமலை விளக்கிபாண்டி, கார்த்திகேயன், ஜெயவீரா, ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




