புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார்.

இதில் காரைக்கால் நகராட்சி புதிய வார சந்தை திடலில் பாஜக பொதுக்கூட்ட மேடை மற்றும் அரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பொதுக்கூட்ட மேடை மற்றும் அரங்கம் அமைக்கும் பணிகளை பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பொதுக்கூட்டம் நடைபெறும் சந்தை திடல் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மணல் நிரப்பப்பட்டு சமன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் பொதுக்கூட்டத்தில் வருகை தரும் கட்சியினர் வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்குபெறும் வகையில் தேவையான அடிப்படை வசதிகளும் குறிப்பாக வாகன நிறுத்தம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் அவர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் உரிய நேரத்தில் செய்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணபதி செய்தி தொடர்பாளர் அருள் முருகன் மாவட்ட தலைவர் முருகதாஸ் திருநள்ளாறு தொகுதி தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.











