• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மழை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா..,

ByM.I.MOHAMMED FAROOK

May 31, 2025

திருப்பட்டினம் கீழையூர் பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா பூச்சொரிதல். ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம்.

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதியில் பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழமை வாய்ந்த கீழையூர் மழை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதி திருவிழாவையொட்டி இன்று விக்னேஸ்வர பூஜை மற்றும் பூச்சொரிதலுடன் தீமிதி திருவிழா துவங்கியது. 

பூச்சொரிதல் நிகழ்ச்சியை ஒட்டி அம்மனுக்கு  மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதன் பின்னர் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தான அறங்காவல் குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அறங்காவல் குழுவினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வரும் ஜூன் 2-தேதி நடைபெற உள்ளது.