• Sat. Nov 1st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

விஜயிடம் ராகுல் காந்தி பேசியது துக்கம் விசாரிக்க மட்டுமே..,

ByKalamegam Viswanathan

Oct 31, 2025

மதுரையில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது,

ஊரில் எங்கு தேர்தல் நடந்தாலும் தமிழ்நாட்டு மக்களை மட்டும் திட்ட வேண்டும்

ஒரிசாவில் நடக்கும் போது தமிழர்களை திட்டினார் தற்போது பீகாரில் தேர்தல் சமயத்தில் தமிழர்களை திட்டுகிறார்.
உண்மையிலேயே தமிழ்நாட்டின் விரோதிகள் என்று மீண்டும் மோடி நிரூபித்து விட்டார், தமிழர்களை அவமானப்படுத்தும் பாஜகவினர் குறிப்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் இது போன்ற பேச வேண்டும் என்பது அவருடைய டி.என்.ஏ யில் உள்ளது ஆர் எஸ் எஸ் டி.என்.ஏ வில் உள்ளது.

பிரிவினை செய்தால்தான் அவர்களுக்கு ஓட்டு கிடைக்கும் என்பதால் எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்யத் துணிந்தவர்கள்

பிரதமர் மோடியின் இந்த செயல் கண்டனத்திற்குரியது.

அமித்ஷாவை பொருத்தமட்டில் தமிழ்நாட்டில் திமுக இந்தியா கூட்டணியை அவர்கள் தோற்கடிக்க வேண்டும்
அப்படி தோற்கடிக்க வேண்டும் என்றால் 21 +19 கூட்டி சிறுபிள்ளை கணக்கு போல 2024 தேர்தலின் போது அதிமுக 21% பாஜக பெற்ற 19 % இரண்டும் சேர்த்தால் 40 இதை வைத்து பாஜக திமுக இந்தியா கூட்டணியை 2026 ல் தோற்கடித்து விடும் என்று அமித்ஷா கணக்கு போட்டு வருகிறார்.

எடப்பாடி பழனிச்சாமியை வைத்து அதிமுக என்ற கட்சியை அமித்ஷா திமுக என்று மாற்றி அதிமுக கடையை காலி செய்து விட்டார், தற்போது அதிமுகவில் அலங்காரப் பொருட்கள் மட்டும் தான் உள்ளது உள்ளே சாமான் அனைத்தையும் திருடி விட்டார்கள் கடை காலியாகிவிட்டது.

அதன் விளைவாக இன்னொரு புதிய கட்சி அதிமுக விக்கு மாற்றாக வரும் தமிழக வெற்றிக்கழகத்தை கூட்டணி பேச்சுவார்த்தை செய்து வருகிறோம் என மக்களை குழப்பி வருகிறார்கள்.

அதிமுக என்பது அமித்ஷா திமுக வாக மாறியதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள் எனவே இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்

கரூர் சம்பவத்தில் துயரத்திற்கு ஆறுதல் கூறவே ராகுல் ஒருமுறை மட்டும் விஜயிடம் தொடர்பு கொண்டார் மற்றபடி தற்போது இரண்டாவது முறை பேசியதாக எனக்கு தெரியவில்லை

விஜயிடம் ராகுல் காந்தி பேசியது துக்கம் விசாரிக்க மட்டுமே .

அமித்ஷாவிடம் ஏமாந்தவர்கள் பட்டியலில் ஓபிஎஸ் க்கு தான் தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ளது இரண்டாவது தினகரன் மூன்றாவது தான் பழனிச்சாமி

அதிமுகவே முற்றிலுமாக முடித்து வைக்கும் பெருமையை அமித்ஷா பெற்றுள்ளார் ,

எம்ஜிஆர் ஜெயலலிதா தொண்டர்கள் விசுவாசிகள் அமித்ஷாவை ஒரு நாளும் மன்னித்து விடக்கூடாது ,

அதிமுகவின் அழிவுக்கு காரணம் அமித்ஷா தான் வரும் நாட்களில் முழுவதுமாக அதிமுகவை அமித்ஷா முடிப்பார், அதிமுகவை அளித்ததின் மூலம் தமிழகத்தில் பலன் பெறலாம் என நினைக்கிறார் ஆனால் தமிழக மக்கள் அதை ஒரு நாளும் ஏற்கமாட்டார்கள்.

காங்கிரஸ் எஸ் ஐ ஆர் ஐ எதிர்க்கிறது மதுரை மாவட்டத்தில் ஏறக்குறைய 60 சதவீத வாக்காளர்கள் திரும்ப சேர்க்க வேண்டும் என்ற நிலை உள்ளது

சாதாரண ஏழை சாமானிய மக்களை கஷ்டப்படுத்தி அவர்களை துன்பப்படுத்தும் சதி தான் மோடி அமித்சாவின் வெறி தான் இந்த எஸ்ஐஆர் திருத்த சட்டம்

முறையான சான்றிதழ்களை சமர்ப்பிக்காத சாமானிய விளிம்பு நிலை மக்களை அகற்றுவதற்காக தான் இந்த எஸ் ஐ ஆர் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி தமிழக வெற்றி கழகம், ஓபிஎஸ் , தினகரன் ஆகியோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பாஜக அதிமுக மட்டும் தான் எஸ் ஐ ஆர் ஐ ஆதரிக்கிறது

செல்வப் பெருந்தகை தெளிவாக சொல்லிவிட்டார் அதிகாரிகளிடம் அவர் பேசிக் கொண்டிருந்ததை ஊடகத்தில் வெளியானது தான் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.

ஏஇ அதிகாரி ஒருவர் செய்த செயலால் அதற்கான விளக்கத்தையும் அவரே வழங்கி விட்டார் அவருக்கும் மன வேதனை ஏற்பட்டிருக்கலாம் அதிகாரிகளின் செயலை பார்த்து.

இந்தியா கூட்டணி பலமாக உள்ளது இந்தியா கூட்டணி பலமாக இருக்க வேண்டும் என பல தியாகங்களை காங்கிரஸ் செய்துள்ளது அதில் இதுவும் ஒரு தியாகமாக இருக்கட்டும்.

2026 தேர்தலில்அதிக சீட்டு கேட்பீர்களா என்ற கேள்விக்கு?

டெல்லியில் இருந்து இங்கு வருவார்கள் தேர்தல் நேரத்தில் சீட்டு பேசுவதற்கு அவர்களிடம் உங்களை பேச சொல்கிறேன்

எஸ் ஐ ஆர் ல் எடப்பாடி பெயரையும் நீக்கிவிடப் போகிறார்கள் கவனமாக இருக்க சொல்லுங்கள், விளையாட்டுப் போக்கில் எடப்பாடி விமர்சனம் செய்கிறார் 62 லட்சம் வாக்காளர்களை தற்போது வரை நீக்கி உள்ளார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி இதன சாதாரணமாக எடுத்துக் கொண்டு பேச வேண்டாம், உண்மையான பாஜக செய்த அட்டூழியங்களில் ஒன்று தான் எஸ் ஐ ஆர் .

முறையான சான்றிதழ்கள் இல்லாதவர்கள் இதனால் மிகவும் அல்லல் படுவார்கள் 85 ஆண்டுக்குப் பின் பிறந்தவர்கள் எச்சரிக்கையாக இருங்கள் எல்லாரையும் ஓட விட போறார்கள் என்னையும் உங்களையும் ஓட விட போறார்கள்.
தேவையில்லாத ஒரு அலைக்கழிப்பு தான் எஸ் ஐ ஆர்

வாக்காளர் திருத்தம் ஒவ்வொரு ஆண்டும் தற்போது வரை முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, எடப்பாடி போன்ற பொறுப்போடு உள்ளவர்கள் இதற்கு ஆதரவாக பேசுவது ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளுவதற்கு அமித்ஷாவிற்கு உதவுகிறது.