• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டெஸ்லா நிறுவனத்தில் இனப் பாகுபாடு?

மின்சார கார்களை உற்பத்தி செய்வதில் முன்னனியில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையில் இனப் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த, நியாயமான வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதித்துறை என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டெஸ்லா நிறுவனத்தின் FREMONT என்ற தொழிற்சாலையில் இன ரீதியில் பிரிவினை காட்டப்படுவதற்கான ஆதாரத்தை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கறுப்பினத்தவர் அல்லாத தொழிலாளர்களுக்கு ஆலையில் வேலை ஒதுக்கீடு, ஒழுக்கம், ஊதியம் மற்றும் பதவி உயர்வு ஆகிவயற்றில் அடிக்கடி முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் உள்ள கறுப்பினத் தொழிலாளர்கள் தொடர்ந்து மிகவும் இன அவதூறுகளுக்கு ஆளாவதாகவும், இனவெறி நகைச்சுவைகளுக்கு உடப்டுத்தப்படுவதாகவும் கலிஃபோர்னியா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்பின அல்லது ஆப்ரிக்க அமெரிக்கர்களுடன் ஒப்பிடும்போது, மற்ற தொழிலாளர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கையில் மென்மையான போக்கு கடைப்பிடிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், அனைத்து வகையான பாகுபாடுகளையும், துன்புறுத்தல்களையும் எதிர்ப்பாக டெஸ்லா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும், பாதுகாப்பான, மரியாதைக்குரிய, நியாயமான பணியை வழங்க உறுதிபூண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.