• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆர் பி உதயகுமார்..,

ByKalamegam Viswanathan

Dec 20, 2025

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பொதுமக்கள் சார சாரையாக வரிசையில் நின்று நலத்திட்ட உதவிகளை வாங்கிச் சென்றனர்

தமிழக முழுவதும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வருட காலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருமங்கலம் தொகுதியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி பகுதியில் நேரில் சென்று 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கனக்கான பொதுமக்கள் சார சாரையாக வரிசையில் நின்று கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது பொதுமக்களிடம் அதிமுகவின் சாதனைகளை எடுத்துச் சொல்லியும் திமுக அரசின் கையாலாகாததனத்தை எடுத்துச் சொல்லியும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என தெரிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அதிமுகவின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் திருப்பதி மாநில பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் பாவடியான் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் கலைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சிவரக்கோட்டை ஆதிராஜா மீனவரணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி கலைப் பிரிவு மாவட்டச் செயலாளர் சிவசக்தி நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் சம்பத் முனியாண்டி நாகராஜ் பழனி விஜி மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.