உசிலம்பட்டியில் பி. கே.மூக்கையாத்தேவர் 46 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ தலைமையிலான நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.,

5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த பி.கே.மூக்கையாத்தேவர் – ன் 46 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அவரது 46 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார், முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன், உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏக்கள் ஐ.மகேந்திரன், பா. நீதிபதி, தவசி, மேலும் பெரியபுள்ளான் என்ற செல்வம் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் வருகை தந்து பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.













; ?>)
; ?>)
; ?>)