சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார்
வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:
மதுரையில் 10 தொகுதிகளில் கடந்த நான்கரை ஆண்டு காலம் திமுக ஆட்சியில் என்ன வளர்ச்சி திட்டங்கள் என்று பார்த்தால் அவர்கள் விளம்பரம் செய்வதை தவிர விவரமாக எந்த திட்டமும் செய்யவில்லை. இன்னும் ஆறு மாதங்களாக உள்ளது மதுரைக்கு என்ன செய்யப் போகிறார்கள்? மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் வளர்ச்சி திட்டங்களுக்கு எந்த அக்கறையும் செய்யவில்லை என மிகப் பெரிய மக்களின் கேள்வி எழும்பி உள்ளது.

இதே கடந்த அம்மாவின் ஆட்சிக்காலத்திலும், எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம். புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 40 ஆண்டு காலம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் 1,296 கோடியில் குடிநீர்த்திட்டம், ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம்.மேலூர், திருமங்கலத்தில் புதிய வருவாய் கோட்டங்கள். திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, கள்ளிக்குடி ஆகிய பகுதிகளில் புதிய வட்டங்கள் வைகை ஆற்றில் குறுக்கே தடுப்பணைகள், டெல்லியில் கிடைக்கும் மருத்துவ சேவையை போல மதுரையில் கிடைக்க எய்ம்ஸ் மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு இணையாகஅரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடங்கள், மேலும் 150 கோடியில் மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை, மீனாட்சி மிஷன் முதல் கப்பலூர் வரை உள்ள 27 கிலோமீட்டர் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றியது, திருமங்கலம் வாடிப்பட்டி வரை புதிய சுற்றுச்சாலை, திருமங்கலம் கொல்லம் நான்கு வழி சாலை.வைகை ஆற்றை பாதுகாக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வைகை கரையோரங்களில் சாலைகள் அமைக்கப்பட்டது.திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது ஆனால் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு பழைய பேருந்து நிலையத்தை புதுப்பித்து வணிகவளாகமாக முயற்சி செய்கிறார்கள். அதேபோல திருமங்கலம் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது அம்மாவின் அரசு.
இப்படி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தந்து மக்களை நேசிக்கும் தலைவராக எடப்பாடியார் இருந்து வருகிறார். இதன் மூலம் மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ளார். குறிப்பாக கொரோனா காலங்களில் கட்சியின் சார்பில் 150 நாட்கள் அம்மா கிச்சன் சார்பில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இளைஞர்களுக்கு சைக்கிள், கம்ப்யூட்டர் இப்படி பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டது.
தற்போது நான்கரை ஆண்டுகளுக்குப் பின்பு உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்திற்கு மனுக்கள் வாங்குகிறார்கள்.அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதா என்று பார்த்தால் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்று மக்களே குற்றம் சாட்டுகிறார்கள் .அந்த மனுக்களை எல்லாம் குப்பைகள் தான் கிடைக்கிறது.
மகளிர் விடியல் பயணம் என்று சொன்னார்கள் ஆனால் அந்த பேருந்துகள் எல்லாம் மிகவும் மோசமாக உள்ளது திருமங்கலத்தில் கூட விபத்து ஏற்பட்டு பத்து பேர் காயம் அடைந்துள்ளார்கள் இன்றைக்கு கலைஞர் விடியல் பேருந்து பயணம் என்பது மக்கள் பாதுகாப்பற்ற பயணமாக உள்ளது.
அதேபோல மருத்துவ கழிவுகள் கேரளாவில் இருந்து தமிழகத்தில் கொட்டப்பட்டு வருகிறது இதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இருந்தாலும், தற்போது திருமங்கலம் தொகுதியில் உள்ள உரப்பனூர் கண்மாய்களில் கொட்டப்பட்டு வருகிறது என்பது விவசாயிகள் வேதனையை அடைந்து வருகிறார்கள். இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
அதேபோல எடப்பாடியார் ஆட்சியில் வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதற்காக அரசாணை எண் 50 மூலம் வெளியிட்டார் .தற்போது கூட மருதங்குடி, வெள்ளாங்குளம், கூடக்கோவில் போன்ற பகுதிகளில் மண் அளப்படுகிறது. இதில் கூடக்கோவில் பகுதியில் கூட பொதுமக்களுக்கும், மணல் அள்ளும் குண்டர்களுக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது இதை நானே நேரில் சென்று பார்த்தேன்.
அம்மாவின் ஆட்சிக்காலத்தில் கனிம வளத்திற்கு பாதுகாப்பு அரணாக இருந்தோம் என நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி கூறுகிறோம். ஆனால் இன்றைக்கு ஆட்சியாளர்களே மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார் என மக்களே குற்றம் சாட்டு வருகிறார்கள்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் மனு கொடுத்தோம் இன்றைக்கு திருமங்கலத்தில் பல மலைகளைக் காணவில்லை,பலமுறை கனிம வள கொள்ளை குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருவேளை ஆட்சியாளர்களே பங்குதாரர்களாக உள்ளார்கள் என்று அய்யப்பாடு உள்ளது.
கனிமவளத்தை பாதுகாக்க வேண்டிய நமது பொறுப்பு உண்டு .உங்கள் சுயநலத்துடன் கனிம வளத்தை சுரண்டி வருங்கால தலைமுறைக்கு வறட்சி,பேராபத்தை உருவாக்கிட வேண்டாம். கனிமவளத்தை பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் பலமுறை கூறுகிறோம். அதற்கு நீங்கள் செவி எடுக்க மறுத்தால் எடப்பாடியாரின் ஆணை பெற்று மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதை உங்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறோம்.
நான் கடந்த 10 ஆண்டில் அமைச்சராக இருந்தும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தும், சட்டமன்ற துணைத் தலைவராக இருந்தும் நாங்கள் அனுப்பும் மனுவிற்கு நீங்கள் தீர்வு காண முடியவில்லை .அப்படி இருக்கும்போது உங்கள் ஸ்டாலின், எங்களுடைய ஸ்டாலின், அவரோட ஸ்டாலின் என்ற திட்டத்திற்கு நீங்கள் எப்படி தீர்வு காண போகிறீர்கள் ?
இன்றைக்கு மகளிர் உரிமைத் தொகை, விடியில் பயணம் ,உங்களுடன் ஸ்டாலின் திட்டங்கள் எல்லாம் மனுக்களோடு போய்விட்டது.ஆகவே திமுக ஆட்சியின் மீது மக்கள் கொதிப்பில் உள்ளனர்.வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் சரியான தீர்ப்பு வழங்கி ,எடப்பாடியாரை முதலமைச்சராக ஆக்குவார்கள். அப்போது மக்கள் குறைகள் போக்கப்படும், இயற்கை வளங்கள் காக்கப்படும் என கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)