• Sat. Apr 27th, 2024

துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்

சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் ,முயற்சி ஒன்று தான் ஆனால் ஒருவர் மட்டுமே வெற்றி அடைந்து ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்குகிறார் .ஆக முயற்சி,சரியான முயற்சி மட்டுமே வெற்றியை தரும் .
சினிமாவில் சுட்ட கதையாக இருந்தாலும் அதை சுவையாக தரும் டெக்கினிக்கை கற்றவருக்கு மட்டுமே இங்கு கட்அவுட் , மற்றவர்களுக்கு கெட்அவுட் .
இந்த பட ஹீரோ ஜெகநாதன் கிட்ட ,கண்ணை மூடி கேட்டா நீங்க விஜய்சேதுபதி பேசற மாதிரி இருக்குனு சொல்லி இருப்பாங்க.அதை நம்பி நீங்க நடிச்ச இந்த படத்தை நாங்க கண்ணை தொறந்து தானே பார்க்க வேண்டி இருக்கு .என்னத்த சொல்ல …
சரி, துரிதம் படத்தின் கதையை பார்ப்போம் -ஹீரோ ஜெகநாதனோடு லவ் பிரேக் அப் ஆன ஹீரோயின் ஈடன் மதுரைக்கு, தீபாவளி கொண்டாட்டத்திற்காக எதிர்பாரா விதமாக ஹீரோ ஜெகநாதனோடு பைக்கில்சென்னையில் இருந்து கிளம்பறாங்க .ஆனா சாதி வெறி பிடித்த தன் அப்பா வெங்கடேஷிடம் தன்னோடு ரூமில் தங்கியிருந்த மூன்று தோழிகளோடு காரில் வருவதாக பொய் சொல்கிறார் .அப்பா வெங்கடேஷ் சொன்னது போல ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போனில் பேசுவது போல தோழிகளிடம் சொல்லி கான்ப்ரன்ஸ் கால் மூலம் பேசுகிறார் .ஹீரோ ,ஹீரோயின் இருவரும் வந்த பைக் வழியில் பஞ்சர் ஆக,அந்த வழியே வந்த வண்டிகளிடம் லிப்ட் கேட்கிறார்கள் இந்த சூழலை பயன் படுத்தி, வில்லன் ராமசந்திரன் துரைராஜ் ஹீரோயினை கடத்துகிறார் .துரிதமாக செயல்பட்டு ஹீரோயினை ஹீரோ எப்படி மீட்கிறார் என்பது தான் கதையே .
இந்த படத்தின் இயக்குனர் சீனிவாசன் கொஞ்சம் ரசனையோடு ஆர்ட்டிஸ்ட் செலக்சன் நடத்தி இந்த கதையை படமாக்கி இருந்தால் இந்த படம் கொஞ்சமாவது கவனிக்கப் பட்டிருக்கும் .ஹீரோ வில்லனுக்கான லூக்கோடு இருப்பதால் அடுத்த படத்தில் மெனக் கெட்டால் மீண்டும் ஒரு இளம் ஆனந்தராஜ் போல ஹீரோ ,ஹீரோயின்ஸ் களை அலற விடலாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *