திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேற்றி பகுதியில் அமைந்துள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் ஆய்வு செய்வதற்காக ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது
இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி நிறுவனம் நடத்தப்படும் அருங்காட்சியகமும் உள்ளது.
மேலும் அருங்காட்சியத்தில் விண்வெளியில் நடக்கும் மாற்றங்கள் சூரிய குடும்பத்தில் ஏற்படும் நிகழ்வுகள், சந்திர கிரகணம் சூரிய கிரகணம், கோள்கள் பற்றிய மாதிரிகளை வைத்து அருங்காட்சியம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை ஒன்பது மணியிலிருந்து மாலை 6:00 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணி முதல் ஒரு மணி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி கட்டணமாக 12 வயதிலிருந்து ரூபாய் 50 ரூபாய் நுழைவு கட்டணமாக பெற்று அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைகள் வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் தொலைநோக்கியின் உதவியுடன் Jupiter moon தொலைநோக்கி கருவியின் மூலம் பார்க்கும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 11 மற்றும் 12ம் தேதி அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை தொலைநோக்கியின் மூலம் Jupiter மற்றும் moon பார்ப்பதற்கு பிரத்யோகமாக தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை காண ஆர்வத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முன்பதிவு செய்ய QR code அறிமுகப்படுத்தியுள்ளது கொடைக்கானலில் அமைந்துள்ள வானிலை ஆராய்ச்சி நிலையம்.
மேலும் பகல் நேரங்களில் கண்டு கழிப்பதற்கு முன்பதிவு செய்வதற்கான www.iiap.res.in இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.